என்பொண்டாட்டி 9௦ லட்சம் டொலரை திருடிவிட்டாள்-பிரபல பிரபலம் அழுகை
மரடோனா
தனது முன்னாள் மனைவி தனது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 90 லட்சம் டாலர்களை திருடிவிட்டதாக
ஆர்ஜண்டீனாவின் முன்னாள் கால்பந்து நட்சத்திரமான டியோகோ மரடோனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் மனைவியை திருடி என்கிறார் மரடோனா
முன்னாள் மனைவியை திருடி என்கிறார் மரடோனா
தனது சிறுபிராயக் காதலியான கிளவுடியா வில்லஃபேன் ”ஒரு திருடி” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மரடோனா உலகின் சிறந்த ஒரு கால்பந்து நட்சத்திரமாக வளர்வதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் தமது இளமைக்காலத்தில் ஒரு வறுமையான பின்னணி கொண்ட தமதுவாழ்விடத்தில் சந்தித்து, ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர்.
அவர்களுடைய இரு மகள்மாரும் தமது தாய்க்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதியுள்ளனர்.

Related Post